Thursday, October 18, 2018

நட்டாற்றில் விட்ட கதை.

                        என் நண்பர் ஒருவர் தன மகளின் கல்யாணத்திற்காக வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கத்  தன மனைவியுடன் சென்றார். இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.சென்னையில் பாரிமுனை அருகில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள பெரிய கடையில் நுழைந்தனர். வெகுநேரம் மாற்றி மாற்றிப்   பார்த்துக் கடைசியில் ஒரு வழியாகப் பாத்திரங்களை பேக் செயது வாங்கி கொண்டு  பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.
                          வெகுநேரமாகிவிட்டதால் பசியில் இருவரும் களைத்துப் போயிருந்தனர்.இருந்தாலும் வாங்கிய பொருட்களை பற்றி பேசிக்கொண்டே வாகனம் நிறுத்திய இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.என் நண்பர் பேசிக்கொண்டே வந்தார். அவருக்குத் தன மனைவியின் மனம் திருப்தி அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.தன மனதுக்குள் தன்னைப் பாராட்டிக் கொண்டார். அந்த மகிழ்ச்சியில் வண்டியைச் செலுத்தினார். "இத்தனை வருஷம் கழிச்சாவது உன் மனசு  சந்தோஷப் பட்டுச்சே   அதுதான் எனக்கும் திருப்தி என்ன சொல்றே?"என்றவருக்கு தன மனைவி ஏதும் பேசாமல் வருவது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் தன மனைவி வாயினாலேயே தன்னைப் பற்றிய பெருமையைக் கேட்க வேண்டுமென்று தோன்றியதோ என்ன்வோசற்றே அதட்டலாக "ஏய் 
என்ன நீ எதுவும் பேசாமலேயே வருகிறாய்?இப்பக்கூட உனக்கு ஒத்துக்க முடியலையா?"என்றவர் சற்றே திரும்பிப் பார்த்தவர் திடுக்கிட்டார்.
பின்னால் அமர்ந்திருந்த மனைவியைக் காணோம்.சட்டென்று வண்டியை .நிறுத்திக் கீழே இறங்கினார்.ஒரு நிமிடம் யோசித்தார் 
பாரிமுனையில் இருந்து எழும்பூர் தாண்டி வந்திருந்தார்.உடனே  தொலைத்த இடத்தில் தேடவேண்டும் என்ற பொன்மொழி நினைவுக்கு வர வண்டியைத் திருப்பிக் கொண்டு பாரிமுனை நோக்கிச் சென்றார்.சற்றுத் தொலைவிலேயே பேருந்து நிறுத்தத்தில் மனைவி நிழலுக்கு ஒதுங்கியவராய் அமர்ந்திருப்பது தெரிந்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
கணவர் அருகில் வந்ததும்  அவர் மனைவி ,"எங்க, இப்படி நட்டாத்தில விட்டுட்டுப் போவணும்னு எத்தனை நாளா பிளான் போட்டீங்க?எனக்கு வழியும் தெரியாது வாய்க்காலும் தெரியாது"என்றார் சற்றே கடுப்போடு..     "நல்ல வேளை  விட்டுட்டுப் போன இடத்துலே உக்காந்திருந்தியே 
அதுவரைக்கும் சந்தோஷம்.ஏறு  வண்டியில "என்று அதட்டியவர் 
அவர் நன்கு அமர்ந்துள்ளாரா எனத்தெரிந்துகொண்டு வண்டியை 
ஓட்டினார். வழியெங்கும் இருவரும் பேசவில்லை.
        வீடு  வந்து  தன மகளிடம் "உன் கல்யாணம் உனக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்படி."
என்று சொன்னபோது தன கவனக்குறைவை  நினைத்துச் சிரித்துக் கொண்டாராம் என் நண்பர்.இதை அவரே சுவைப்படச் சொன்னபோது நாங்களும்  விழுந்து விழுந்து சிரித்தோம் வேறு என்ன செய்வது?









யி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com