Tuesday, October 22, 2013

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

பழக்கப் படுத்திக் கொள்ளவேணும்.

நாம் சாதாரணமாகவே  தினமும் தவிக்கும் காரியம் ஒன்று உண்டு.தேடுவது. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு வீடு முழுவதும் தேடும் நிகழ்ச்சி எல்லோர் வீடுகளிலும் நடக்கும் காரியம்.இப்படித் தேடுவதால் எத்தனை நேரம் விரயம். சில சமயங்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போக முடியாமல் போவதும் உண்டு.
ஒரு பொருளை அததற்குண்டான இடத்தில் வைப்பதும் வைத்த இடத்தை நினைவில் வைத்துக் கொள்வதும் மிக மிக அவசியமான ஒன்று.
அப்படியிருந்தால் நமக்கு நேரம் மிச்சம் வேலை மிச்சமாகும். அதனால் உண்டாகும் அவசரமும் பதட்டமும் இருக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு நாமும் சரி பள்ளி கல்லூரிக்குப் போகும் பிள்ளைகளும் சரி நன்கு பழக்கப் படுத்திக்  கொள்ளவேண்டும்.
எல்லா வீடுகளிலும் காலை நேரம் பாருங்கள் எவ்வளவு கலாட்டா நடக்கிறது.
பென்சிலைக் காணோம், என் சாக்ஸ் எங்கே, என் ஹோம்வொர்க் நோட்டைக் காணோம் இங்கேதான் வைத்தேன் என்னும் குரல்கள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது. இதில் சில பள்ளி செல்ல விருப்பமில்லாதவர்கள் வேண்டுமென்றே நோட்டை ஒளித்துவிட்டு நோட்புக் இல்லை அதனால் இன்று பள்ளிக்குப் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதும் உண்டு.
இவர்கள் மட்டுமல்ல ஆபீஸ் போகும் பெரியவர்களும் இந்த கலாட்டா செய்வது உண்டு.இதற்கெல்லாம் காரணம் முக்கியமான பொருள்களை உரிய இடத்தில் வைக்காததும்  வைத்த இடத்தை மறந்து போவதும்தான் 
இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாதிருக்க சிறு வயதிலேயே பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும் குழந்தைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

6 comments:

  1. நமஸ்காரங்கள்.

    ஆமாம். மிகச் சரியாகச்சொன்னீர்கள்.

    இது மிகவும் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியதோர் வேலை.

    சோம்பல் படாமல் அதை அதை அந்தந்த இடங்களில் வைக்கப்பழகிக்கொள்ள வேண்டும்.

    எது எங்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    "A PLACE FOR EVERYTHING & EVERYTHING IN ITS PLACE" என்பதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்.

    குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே இதை வலியுறுத்தி கற்பிக்க வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    இதைப்பற்றியே பின்னொருநாள் நான் ஒரு பதிவு எழுதலாம் என்றும் இருக்கிறேன்.

    முடிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை தரிஸிக்க வாங்கோ:

    http://gopu1949.blogspot.in/2013/10/68.html

    அன்புடன் கோபு

    ReplyDelete
  2. அருமையாகச் சொன்னீர்கள் அம்மா... சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்...

    ReplyDelete
  3. அருமையாகச் சொன்னீர்கள்.....

    சிறப்பாகச் சொன்னமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. தேடினேன் என் கண்ணாடிய நேற்று ருக்மணி. அதைப் போல கஷ்டம் கிடையாது. இத்தனிக்கும் காப்பி குடித்த கோப்பை அருகில்தான் வைத்திருந்தேன்.
    உதவிக்கு வந்தது என் தோழி:)
    பகல் பசுமாடு தெரியவில்லையா என்று கேலிகாட்டி அவஸ்தைப் படவைத்துவிட்டாள். உண்மையில் கண்ணாடி வைப்பதற்கு ஒரு இடம் என்று வைத்துக் கொண்டால் சிரமம் இல்லை அல்லவா.
    நன்றி மா.

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள் அம்மா...

    எல்லோர் வீட்டிலும் கடைபிடிக்க வேண்டிய விஷயம்...

    ReplyDelete
  6. கருத்தும் பாராட்டும் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

    ReplyDelete