ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் பெரிய ஆறு இருந்தது.செழிப்பான அந்த ஊரில் நல்ல விளைச்சல் விளைந்தது.அந்த ஊரிலிருந்து அரிசி கடத்துவதாக செய்தி வந்தது. திருடர்கள் திருடிச் செல்வதாய் செய்தி காதுகளில் விழ அந்த ஊரின் தலைவர் ஊர் எல்லையில் ஆட்களை நிறுத்திவைத்தார்.யார் அரிசியை எடுத்துச் சென்றாலும்அவர்களை உடனே காவலரிடம் ஒப்படைத்து வந்தார்.
ஒருநாள் மிதிவண்டியில் ஒருவன் வேகமாக ஊர் எல்லையைக் கடந்தான்.அவனது வண்டியின் பின்புறம் ஒரு சாக்குப் பை இருந்தது.
அவன் எல்லையில் வந்ததும் காவலர்கள் அவனைப் பிடித்து நிறுத்தி விசாரித்தனர்.
அவனோ தைரியமாக தனது பையைத் திறந்து காட்டினான். அதில் நிறைய மணல்தான் இருந்தது.தன வீடு இடிந்து விட்டதாகவும் அதைசீர் படுத்த மணல் எடுத்துச் செல்வதாகவும் கூறவே அவனைப் போக விட்டனர். இப்படியே சுமார் பத்துநாட்கள் கடந்தன.திடீரென்று அவன் வருவது நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அந்த ஊரில் இதுவரை பத்து மிதிவண்டிகள் காணவில்லை என்பது.அந்தத் திருடனின் திறமையைப் பாராட்டுவதா வேண்டாமா? இப்படிப்பட்டவர்கள் திருந்துவது எப்படி?" திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டைத் திருத்த முடியாது"
என்று பட்டுக் கோட்டை சொன்னது சரிதானே!
என்று பட்டுக் கோட்டை சொன்னது சரிதானே!
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
No comments:
Post a Comment