ஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் அந்தப் பெண் என்னிடம் வருவாள். நானும் தகக ஆலோசனை சொல்வேன் சமயத்தில் உதவியும் செய்வதுண்டு.ஆறு மாதங்கள் கழித்து ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் சென்றார். அந்த இரண்டு நாட்களும் அந்தப் பெண் என்னைப் பார்க்க வரவில்லை..
மூன்றாவது நாள் அவள் என்னைப் பார்க்க வந்தாள்.வந்தவள் சற்றே சிந்தனையுடன் காட்சியளித்தாள்.
காரணம் கேட்டேன். வந்தவர் அவள் மாமனார்.தன் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தியோடு பணத்துக்கும் முடிந்தவரை ஏற்பாடு செய் எனக் கூறியிருக்கிறார்.அதுதான் இவள் கவலை.பணத்துக்கு எங்கே போவது?
நானும் சமாதானமாக ஏதோ கல்யாணம் என்றால் உதவி செய்யத்தானே வேண்டும்?முடிந்தவரை முயற்சித்துப் பார்.என்றேன்.அன்று வீடு திரும்பியவள் மூன்று நாட்கள் வரை வரவில்லை.
அதன்பின் ஒரு நாள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் என்னைத் தேடி வந்தாள்.அழுதிருக்கிறாள் எனப் புரிந்துகொண்ட நான் அவள் குடிக்க காப்பி கலந்து கொடுத்து அவளை சமாதானப் படுத்தினேன்.
அவள் கணவன் அவளின் நகைகளைத் தன் தங்கையின் கல்யாண சீராகக் கொடுக்கும்படி வற்புறுத்துகிறானாம். அதனால் மூன்று நாட்களாக வீட்டில் கணவன் மனைவிக்கிடையே பிணக்கு.கணவன் சாப்பிடுவதில்லை பேசுவதில்லை என அழத் தொடங்கினாள்.
.அவளிடம் ஒரு பெண்ணுக்கு அதிலும் ஒரு வீட்டின் மூத்த மருமகளாகி வந்தவளின் பொறுப்பையும் கடமையையும் எடுத்து விளக்கினேன்.
அவளோ,"தங்கையின் கல்யாணத்திற்கு இவர் கடன் வாங்கிக் கொடுக்கட்டும். என்னைக் கேட்கவேண்டுமா?"என்றாள்.
நான் சிரித்தேன் அடிபயித்தியமே, நீ கொடுத்தால் என்ன உன் கணவர் கொடுத்தால் என்ன?
உன் கணவர் கொடுப்பதைவிட நீ கொடுப்பது உனக்கு ரெட்டை லாபம்."என்றேன்.
புரியாமல் விழித்து எப்படி என்பது போல் என்னைப் பார்த்தாள்.
உன் கணவர் கொடுத்தால் ஒரு மகன் செய்யவேண்டிய கடமை என்று சாதாரணமாகப் போகும்.ஆனால் நீ கொடுத்தால் நாத்தனாருக்காக மாமனார் சுமையைக் குறைக்க மருமகள் கொடுத்தாள் என்ற பெருமை உன் காலத்துக்கும் இருக்கும்.உன் பெருந்தன்மையைப் பார்த்து உன் கணவனே உனக்கு விரைவில் நகை நீ கேளாமலேயே செய்து போடுவார்.
உன்னிடம் இருக்கும் பதினைந்து பவுனில் ஐந்து பவுனைக் கொடுத்துப் பார். உன் மாமியார் வீட்டில் உனக்கு எத்தனை மதிப்புக் கூடுகிறது பார் உதவி செய்வது யாருக்கு உன்வீட்டாருக்குத்தானே என்றபோது அவள் முகத்தில் தெளிவு பிறந்தது.அன்று மாலையிலேயே கணவருடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்குப் புறப்பட்டாள்
ஒரு மாதம் கழித்து ஊருக்குச் சென்று வந்தவள் நேராக என்னிடம் வந்தாள். முகம் கொள்ளாத மகிழ்ச்சியாகத் தெரிந்தாள்.
அவளைப் புன்னகையுடன் வரவேற்றேன்.
"அம்மா, நீங்க சொன்னது நூத்துக்கு நூறு பலிச்சிடுச்சு.நான் நகையைக் கழட்டி சந்தோஷமா என் மாமனார் கிட்டே கொடுத்தப்போ அவர் முகத்திலே தெரிஞ்ச மகிழ்ச்சியும் நிம்மதியும் அதைச் சொல்லவே வார்த்தைகள் இல்லேம்மா.அப்புறம் எனக்கு என் மாமியார் வீட்டிலே என்ன ஒரு மதிப்பு மரியாதை. கல்யாணப் பெண் என் நாத்தனார் எனக்குச் செய்த உபசரிப்பும் காட்டின மரியாதையும் எவ்வளவுங்கறீங்க. இந்தப் பெருமையெல்லாம் உங்க ஆலோசனையைக் கேட்டு நடந்ததாலேதான் கெடைச்சுது.
வாழ்க்கையிலே உதவின்னு வந்தா செய்யத் தயங்காதே அந்த உதவி உன்னை ரொம்ப உயர்த்தும் என்றேன். சுமார் முப்பது வருடங்கள் கழித்து அவளை ஒருமுறை உறவினர் வீடு சென்று திரும்பும் போது பார்த்தேன்.உடம்பு கொள்ளாத நகையும் பட்டுப் புடவையுமாக காட்சியளித்தாள்.
என்னைப் பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.சொந்த வீடு கட்டியிருப்பதாகவும் மகன் இஞ்சினீயர் ஆக பணிபுரிவதாகவும் மகளுக்குத் திருமணமாகி துபாயில் இருப்பதாகவும் சொன்னபோது நான் மகிழ்ந்தேன்.
தன நாத்தனார் அமேரிக்கா சென்றுவிட்டதாகவும் வாரம் தவறாமல் போன் பேசுவதாகவும் தன கணவன் தன மீது மதிப்பும் அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகவும் சொன்னவள் எல்லாவற்றுக்கும் மூல காரணம் 'அன்று மாமனாருக்கு நான் செய்த உதவிதான். உங்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன்.' என்றாள்
"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்று வள்ளுவர் வாக்கு பொய்க்குமா என நான் நினைத்துக் கொண்டு அவளிடமிருந்து விடை பெற்றேன்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Tuesday, May 22, 2012
Thursday, May 3, 2012
.18.பிறர் பசியாற்றினால்
என் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன்
தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்டு
அரசனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தான்.அந்த நாட்டு மக்கள்
அனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள் என்பதே காரணம்.
இதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து
அவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான்.
உண்ணும்போது உண்பவர்முழங்கை மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான்.
இருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து
கையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.
இதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள்
தான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து தன
நண்பனாக்கிக் கொண்டான்.
எனவே பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி
வளர்த்தால் தம்பிள்ளை தானே வளரும் என்பார்கள் என்று விளக்கமும் அளித்தார்
கள்.இதை நாமும் ஒப்புக்கொள்ளதத்தானே வேண்டும்.
Tuesday, April 17, 2012
17-சேற்றில் செந்தாமரை
. ஒரு முறை நாங்கள் பழனிக்கு முருகனை தரிசிக்கச் சென்றோம்.நாங்கள் சென்ற ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.மலைப் பகுதி வந்தவுடன் விரைவில் பழனி வந்துவிடும் என்று வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.பழனியை நெருங்கியபோது ரயில் மெதுவாகச் சென்றது.
அந்த மலைகளின் இடையே இரண்டு பெண்கள் பதினாறு பதினேழு வயதிருக்கும் குட்டைப் பாவாடை அணிந்து தோளிலே ஒரு பையை மாட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.அவர்களின் உடை அலங்காரத்திளிருந்தே அவர்கள் இருவரும் நரிக்குறவர் என்னும் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டேன்.
சற்று அருகே நின்றிருந்தவர்கள் ரயிலை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருத்தியின் கண்களைப் பார்த்தபோது என்னால் அந்தக் கண்களை விட்டு வேறு எதையும் பார்க்க இயலவில்லை. மதுரை மீனாட்சியை கயல்கண்ணி என்பார்கள் அந்தக் கண்களைத்தான் அந்த அம்பாள் இவளுக்குக் கொடுத்திருக்கிறாள் என்னும் படி அந்தக் கண்கள் பிரகாசித்தன.
ஊருக்குள் சென்று முருகனைத் தரிசித்தபின்பும் அதை என்னால் மறக்க முடியவில்லை.
ஊர்திரும்புவதற்காக ரயிலடியில் அமர்ந்திருந்த போது அந்தப் பெண்களை அருகில் பார்க்க நேர்ந்தது.
அந்த அழகிய கண்களால் அவள் முகமே அந்த அம்பாளின் முகமாக எனக்குத் தெரிந்தது.
"உன் பெயர் என்னம்மா?"
"எம்பேரு மதுராந்தகி.இவ என் சிநேகிதி இவ பேரு செங்கல்பட்லா"
மதுராந்தகி என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்."பொருத்தமான பேரு.அது என்ன செங்கல்பட்லா?அவளுக்கும் உன்னைப் போல நல்ல பேரு இல்லையா?" என்றேன் புன்னகையோடு.
"அதுவா அம்மா, நானு மதுராந்தகத்திலே இருக்கும்போது பொறந்தேனாம்.அதனாலே மதுராந்தகி. இவ செங்கல்பட்டிலே இருக்கும்போது பொறந்தா. அதனாலே செங்கல்பட்லா.நாங்க எந்த ஊருலே பொறந்தோமோ அந்த ஊரு பேரைத்தான் வச்சுக் கூப்புடுவாங்கோ." என்று விட்டுச் சிரித்தாள் அந்தப் பெண்.இன்னும் சற்று நேரம் அவளின் அந்த அழகு முகத்தையும் அம்பாளின் அந்தக் கண்களையும் பார்த்துக் கொண்டே இருக்க ஆசையால் அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.ஆனால் ரயில் அன்று சரியான நேரத்திற்கு வந்துவிடவே அந்தப் பெண்களுக்கு ஒரு ஐந்து ரூபாய்த தாளைக் கொடுத்துவிட்டு எழுந்தேன்.
"நீங்க நல்லாயிருக்கோணும்" அந்த வாழ்த்து அம்பாள் எனக்கு அளித்த ஆசியாக எண்ணிக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.
அழகு என்ற சொல்லைக் கேகும்போதோ படிக்கும் போதோ மதுராந்தகியின் நினைவு வராமல் இருப்பதில்லை.ஆண்டவன் எங்கெல்லாம் அழகை மறைத்து வைத்துள்ளான் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
சேற்றிலே செந்தாமரை என்பதைமட்டுமல்ல குறப் பெண்ணிடமும் கொஞ்சும் அழகை வைத்த அந்த ஆண்டவனின் விளையாட்டை எண்ணி வியக்கிறேன். என்னால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களிலும் உள்ள சிறப்பைத் தேடிப் பார் என்று இறைவன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.
--

Wednesday, April 4, 2012
16.உண்மை அன்பு.
சுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும்ப எண்ணினால் எந்த பேருந்திலும் இடம் கிடைக்கவில்லை. எல்லாப் பேருந்திலும் கூட்ட நெரிசல். சீர்காழியில் கோயிலில் ஏதோ விசேஷம் எனத் தெரிந்தது. மறுநாளைக்கு பயணச் சீட்டை நிர்ணயம் செய்து கொண்டு ஹோட்டலுக்கு வந்து அமர்ந்து கொண்டு யாரேனும் உறவினர் தெரிந்தவர் அந்த ஊரில் இருக்கிறார்களா ஒரு இரவு மட்டும் தங்க என்று யோசித்தோம்.
நல்லவேளையாக அந்த ஊரில் என் நண்பருக்கு உறவினர் இருப்பது நினைவுக்கு வந்தது.எப்போதோ அவரைச் சந்தித்திருந்ததால் அவரது இல்லத்தில் அன்றிரவைக் கழிக்கலாம் என முடிவு செய்து அவர் வீட்டுக் கதவை இரவு எட்டு மணிக்குத் தட்டினேன்.ஒரு பத்து வயது சிறுமி கதவைத் திறந்தாள்.அவளது பின்னாலேயே என் நண்பரின் உறவினரும் வ்ந்தார்.எங்களைப் பார்த்து சற்றே யோசித்தவர் நான் நண்பரின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வந்தவராய் முக மலர்ச்சியுடன் வரவேற்றார்.நடுக்கூடத்தில்மூன்று வயது சிறுவன் சாப்பிடத் தெரியாமல் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.வீட்டின் தலைவர் எங்களை கை கால் அலம்பிக் கொண்டு வாருங்கள் சாப்பிடலாம் என்று உபசரித்தார்.
அவர் பேசிக்கொண்டே குழந்தையைத் தூக்கி சுத்தம் செய்து அந்த இடத்தையும் சித்தம் செய்தார். அதே சமயம் சமையல் கட்டிலிருந்து தாளிக்கும் சத்தம் கேட்டது.பத்து வயதுப் பெண் உள்ளே எங்களுக்காக உப்புமா தயாரித்துக் கொண்டிருப்பது புரிந்தது.அந்தச் சிறுமியின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு வியந்து போனேன் நான்."நான் செய்வேனே ஏன் குழந்தை சிரமப்பட வேண்டும்" என்றேன்.அப்போது அங்கு வந்த அந்தப் பெண் ஒரு புன்னகையாலே தன் மறுப்பைத் தெரிவித்து உள்ளே சென்றாள்.
திடீரென உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.அந்தப் பெண் தன் அப்பாவிடம் ஏதோ பேசினாள்.அவரும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்று விட்டு வ்ந்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவல். இருப்பினும் நாங்கள் அமைதியாகசாப்பிட அமர்ந்தோம்.எல்லோரையும் அமரச் சொல்லி அந்தசிறுமி பரிமாறத் தொடங்கினாள்.அப்போது பின் பக்கமிருந்த ஓர் அறையிலிருந்த பெரும் குரல் கேட்டது.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
அந்தப் பெண் தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.அவரும் "பரவாயில்லை அம்மா.அவளை இங்கேயே அழைத்து வந்து உட்காரவை.
அவளை விட்டு விட்டு எனக்கென்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது."என்றவுடன் தயங்கியவாறே அந்தப் பெண் உள்ளே சென்று ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள்.அங்கேயே உட்கார வைத்து அந்த அம்மாவுக்கும் ஊட்டி விட்டாள்.சாப்பிட அடம் செய்த அந்தப் பெண்மணியை கெஞ்சியும் கொஞ்சியும் ஊட்டிவிட்டாள் அந்தச் சிறுமி.
இரவு அனைவரும் தூங்கச் சென்றபின் வீட்டின் தலைவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கூறினார்."எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகின்றன.ஐந்து வருடம் கழித்து மூத்த மகள் பிறந்தாள்.பலவருடங்கள் கழித்து மகன் பிறந்தான். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணியபோது என் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டது.நினைத்ததைப் பேசுவாள். சில சமயம் பொருள்களை விசிறி அடிப்பாள். என்மகள் தான் இப்போது அவளுக்கு தாயாக இருந்து கவனித்துக் கொள்கிறாள்.மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் வந்திருக்கும்போது ஏதேனும் ரகளை செய்தால் என்ன செய்வது என்று அவளை அறையில் போட்டுப் பூட்டி விட்டாள் என் மகள். அதுவே என்னால் தாங்க முடியவில்லை."
அவரின் அன்புள்ளத்தை எண்ணி நான் வியந்தேன்.அப்போது "அப்பா, தூங்கப் போங்கள். அம்மா தூங்கியாச்சு"என்றபடியே அங்கு வந்த அந்தச் சிறுமியை மானசீகமாக வணங்கினேன்.
துன்பத்திலும் புன்னகை முகம் காட்டும் பண்பு, தாயிடம் கொஞ்சவேண்டிய குழந்தை அந்தத் தாய்க்கே தாயாக இருந்து ஊட்டி வளர்க்கும் கனிவு,
வீட்டிற்கு வந்த விருந்தினரை தந்தை சொல்லாமலேயே உபசரித்த சிறப்பு, தந்தையிடம் தாய் தூங்கிவிட்டாள் எனச் சொன்ன பொறுப்புணர்ச்சி,தந்தையைத் தூங்கச் சொன்ன கடமையுணர்ச்சி இத்தனை பண்புகளையும் ஒருங்கே பெற்ற அந்த சிறுமியை நான் வணங்கியது சரிதானே.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Monday, February 27, 2012
15- பொக்கிஷங்கள்
ஒருநாள் என்தம்பி என் இல்லத்திற்கு வந்திருந்தார்.பழைய கதைகளைப் பேசியபோது என்னிடம் இருந்த பழைய எங்களின் சிறு வயது புகைப் படங்களைக் காட்டினேன்.மிகவும் மகிழ்ந்து இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்ததைப் பாராட்டிவிட்டு அந்தப் படங்களைத் தான் எடுத்துப் போய் கணினியில் போட்டு வைப்பதாகவும் சொல்லி வாங்கிப் போனார்.கணினியைப் பார்த்த என் மற்ற சகோதரர்களும் அதைப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.
இன்னொரு சமயம் என் உடன் பணியாற்றும் ஆசிரியர் தனக்கு உ.வே. சா. பற்றிய ஒரு நூல் வேண்டும் கிடைக்குமா என்றார்.என் இல்லத்தில் நான் மிகப் பழைய நூல்களை சேர்த்து வைப்பது வழக்கம். அதில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன்.மிகப் பழமையான பதிப்பு ஒன்று கிடைத்தது. அந்த நண்பரிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்ததும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.அதன்பின் அவர் என்னை நண்பர்களிடம் அறிமுகப் படுத்தும் போதெல்லாம் இவரிடம் இல்லாத நூலே இல்லை. மிகப் பழைய நூல்களெல்லாம் வைத்து ஒரு நூலகத்தையே பாதுகாத்து வருகிறார். என்று அறிமுகப் படுத்தி மிகவும் புகழ ஆரம்பித்தார்.அவரது மகிழ்ச்சி எத்தகையது என்பதையே அந்தச் செயல் காட்டுவதாகப் புரிந்து கொண்டேன்.
மற்றொரு நிகழ்ச்சியும் என் மனதை விட்டு அகலாத நிகழ்ச்சியாக அமைந்தது.என் தூரத்து உறவினர் ஒருவர்நன்றாகப் பாடக்கூடியவர்.எல்லாகுடும்ப விழாக்களிலும் முன்னின்று பாடுவார்.அடிக்கடி எங்களின் இல்லம் வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார். எனக்கும் பாட்டில் மிகுந்த பயிற்ச்சியும் ஈடுபாடும் இருந்ததால் வெகு நேரம் இசைபற்றியும் பாடல்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம்.திடீரென அவர் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள்.அவரதுகடைசி பெண்ணிற்கு திருமணமாகியது.ஓராண்டு கழித்து அவரது பெண்ணை சந்தித்தேன்.அந்தப் பெண் என்னிடம் தனியாக வந்து அத்தை, என் அம்மாவின் குரலைக் கேட்கவேண்டும்போல் இருக்கிறது.நீங்கள் என் அம்மாவின் பாட்டை பதிவு செய்து வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அந்த பதிவு நாடாவைக் கொடுத்தால் நான் பதிவு செய்து கொண்டு திருப்பிக் கொடுக்கிறேன். என்று அவள் கேட்டபோது அந்த பெண்ணின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.எங்களுக்கு அம்மாவின் குரலைப் பதிவு செய்யத் தோன்றாது போயிற்று.ஆனால் நீங்கள் செய்திருப்பது எங்களுக்கு உதவியாக உள்ளது. என்றாள்.அவளிடம் ஆறுதலாக பேசி அந்த ஒலிநாடாவைக் கட்டாயம் தருவதாகக் கூறியபோது அவள் என் கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றி கூறினாள்.பழையன என நாம் நினைக்கும் எல்லாப் பொருள்களும் பழையன என்று ஒதுக்கக் கூடியன அல்ல.சில நினைவுச் சின்னங்களாகவும் இருக்கக் கூடும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டு இத்தகைய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.ஒருசிலருக்கு இவை பொக்கிஷங்கள் போல அரியதாகவும் கூட இருக்கலாம்.என் அனுபவங்கள் எனக்கு இந்தப் பாடத்தைத் தான் கற்றுக் கொடுத்தன.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Sunday, January 22, 2012
நல்ல சொற்கள்.
நல்ல சொற்கள்.
அவரது அனுபவமிக்க சொற்கள் நமது வாழ்க்கைக்கே ஒரு நல்ல பாடமல்லவா?
நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அதற்கு நமது காதுகளில் நல்ல சொற்கள் விழுந்து கொண்டே இருக்க வேண்டும்.
என் தாயார் சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு கிளி வியாபாரி கிளி விற்றுக் கொண்டு சென்றான்.அவ்வூரில் இருந்த கசாப்புக் கடை வைத்திருக்கும் குப்பன் ஒரு கிளியை வாங்கினான். அதை தன் கடையின் முன் கட்டித் தொங்க விட்டான்.அந்தக் கிளியும் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருந்தது.சிலநாட்கள் கழித்து கிளி வியாபாரி இன்னொரு கிளியை ஒரு ஆசிரமம் வைத்து நடத்தும் ஒரு முனிவரிடம் விற்றான்.அந்த ஆசிரமவாசியும் அந்தக் கிளியை ஆசிரமத்தின் முன் பகுதியில் தொங்கவிட்டார். அந்தக் கிளியும் வருவோரையும் போவோரையும் பார்த்துக் கொண்டிருந்தது.
சில நாட்கள் கழித்து கிளி வியாபாரி தான் விற்ற கிளிகளைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்தான்.
முதலில் கசாப்புக் கடைக்குச் சென்றான். அங்கே இருந்த கிளியிடம் சென்று" எப்படி இருக்கிறாய் கிளியே?"என்று அன்புடன் கேட்டான்.
அதற்கு அந்தக் கிளி "டேய் இவன் காலை ஓடி. கழுத்தை வெட்டு என்று மிகவும் கடுமையாகப் பேசியது.
அதே சமயம் கடை முதலாளியும் தன் வேலையாட்களிடம் எப்படி வெட்டுவது என்று சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கிளி வியாபாரி வருத்தத்துடன் வெளியேறினான்.
பின்னர் நேராக முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். உள்ளே நுழைந்தவுடன் "வாருங்கள். நலமா? அமருங்கள். ஏதேனும் பழங்கள் உண்ணுங்கள்" என்ற அன்பான சொற்களைக் கேட்டு மகிழ்ந்தான் வியாபாரி..
அப்போது உள்ளே நுழைந்த முனிவர்,அன்பாக உபசரித்து பழங்கள் உண்ணக் கொடுத்தார்.இப்போது வியாபாரி புரிந்து கொண்டான்.கசாப்புக் கடையில் பேசும் சொற்களை அங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது. முனிவரின் அன்புச் சொற்களை இங்கிருக்கும் கிளி கற்றுக் கொண்டது.அதனால் எங்கே நல்லன பேசப்படுகிறதோ அங்கே நாம் இருந்தால் நமக்கும் அதே சொற்கள் தான் பேச வரும் எனவே நல்லதையே நாடவேண்டும் என்று சொன்னார்கள்.அவரது அனுபவமிக்க சொற்கள் நமது வாழ்க்கைக்கே ஒரு நல்ல பாடமல்லவா?
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
Saturday, January 14, 2012
vaazhththu.
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
Subscribe to:
Posts (Atom)