Saturday, February 15, 2014

மறக்க இயலாதவை.

என் கணவர் அடிக்கடி சொல்லும் சொற்கள் இவை.ஏணி , தோணி, வாத்தியார், நார்த்தங்காய் இவற்றை நாம் என்றும் மறக்க இயலாது.ஏனெனில் இவை நான்கும் நம்மை உயர்த்துவன. எப்படியெனச் சொல்கிறேன்.
        முதலில் ஏணி. இது இருந்த இடத்திலேயே இருக்கும் ஆனால் ஏறுபவரை உயரத்தில் கொண்டு விடும்.
         இரண்டாவது,தோணி.அதாவது படகு.இதுவும் நீரில் மிதக்கும் ஏறுபவரைக் கரை சேர்க்கும்.தான் கரையேறாது.
          மூன்றாவது வாத்தியார்.வகுப்பில்  பயிலும் மாணவனை உயர்த்துவார். ஆனால் அவர் அதே வகுப்பில் இருப்பார்.
          கடைசியாக நார்த்தங்காய் ஊறுகாய்.எவ்வளவு தயிர்சாதம் இலையில் வைத்தாலும் ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாய் வைத்தால் அந்த ஊறுகாய் அப்படியே இருக்க தயிர்சாதம் முழுவதும் வயிற்றுக்குள் போய்விடும்.
         இந்த நான்கு விஷயமும் நம்மால் மறக்க இயலாது என்று அவர் சொன்னது உண்மைதான் எனத் தோன்றுகிறது நீங்களும் ஒப்புக்கொள் வீர்களல்லவா?

2 comments:

  1. கண்டிப்பாக...

    உண்மை அம்மா...

    ReplyDelete
  2. ஆம் உண்மை தான். ஏணி, தோணி, கோணி என்றும் சொல்வார்கள்.

    ”நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி” என்ற இதே தலைப்பில் நான் ஒரு பதிவுகூட வெளியிட்டுள்ளேன்.
    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    கோணி என்றால் சாக்குப்பை. பொருட்களையெல்லாம் போட்டு இறுக்கக்கட்டி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்து எடுத்துச்செல்லப் பயன்படுத்துவார்கள்.

    அவர்கள் வேலை முடிந்ததும், அந்தக் கோணி என்ற சாக்குப்பையைச்சுருட்டி எங்கேயாவது வைப்பார்கள், அல்லது நாளடைவில் தூர எறிந்தும் விடுவார்கள். PACKING MATERIALS போல.

    நல்லதொரு பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete