ஒரு நாள் அரசர் அக்பர் சபையில் அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு மனிதன் அங்குவந்தான் . குண்டோதரனைப் போல் இருந்த அவனைப் பார்த்து சபையோர் அனைவரும் .சிரித்து விட்டனர்.அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த அந்த குண்டன் சபையோரைப் பார்த்துவிட்டு
மன்னனிடம் கூறினான். " மஹாராஜா என் உடம்பை இளைக்கச் செய்ய உங்களால் முடியுமா? அப்படி முடிந்தால் என் காலம் முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருப்பேன். இல்லையேல் உங்கள் நாட்டில் அரசனுக்குரிய பதவியை எனக்கு நீங்கள் தரவேண்டும்" என்றான்.
அக்பர் திகைத்தார்.இவனை ஒரு மாதத்திற்குள் எப்படி இளைக்கச் செய்வது ? மெதுவாகத் திரும்பி அருகே அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்தார்.அவரும் மெதுவாகத் தலையசைத்து சம்மதிக்கச் சொல்லி சைகை காண்பித்தார்.அக்பரும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில் குண்டனிடம்
"சரி உன்விருப்பப்படியே ஆகட்டும்"என்றார்.
"ஒரு விண்ணப்பம். எனக்கு வயிறார சாப்பாடும் போடவேண்டும் பட்டினி போட்டுக் கொல்லக் கூடாது."
.ஒரு மாதம் சென்றது. அன்று குண்டோதரனை சபைக்கு அழைத்து வரப் போகிறார் பீர்பால் என்பதை அறிந்து மக்கள் ஆர்வத்துடன் கூடிஇருந்தனர்
குண்டனை, தவறு அவன் இப்போது இளைத்து பாதி உடம்பாகியிருந்தான்.
அக்பர் ஆச்சரியத்துடன் குண்டனைப் பார்த்தார்.
"உனக்கு உணவு தரவில்லையா?அல்லது மருந்து ஏதேனும் பீர்பால் கொடுத்தாரா ?"
பதில் சொல்லாது தலை குனிந்து தோல்வியடைந்த முகத்தோடு நின்றான் குண்டன்.
"பீர்பால் இது எப்படி நடந்தது?"
"ஒன்றுமில்லை மஹாராஜா.தினமும் இரவு இவர் உணவு உண்டபின் இவர் படுக்கையை சிங்கத்தின் கூண்டுக்கு அருகே போட்டிருந்தேன்.இவரிடம், "சிங்கக் கூண்டின் தாழ்ப்பாள் சரியில்லை கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லி வைத்தேன்.அதுதான் இப்படி வேலை செய்திருக்கிறது.
உணவை விட நிம்மதியான தூக்கம் வேண்டும் அத்துடன் மனதில் பயஉணர்வு இவரது உணவை உடம்பில் ஒட்டாமல் செய்து விட்டது.அதுதான் இளைத்துவிட்டார்."
இதைக் கேட்ட மக்கள் பீர்பாலிடமிருந்து நல்ல பாடத்தை நாமும் கற்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.நாமும் அச்சமில்லாமல் வாழப் பழக வேண்டும் அதையே பாரதியாரும் அச்சம் தவிர என்று சொல்லியிருக்கிறாரன்றோ?
Rukmani Seshasayee
அருமையானதொரு உண்மையை எடுத்துச்சொல்லும் மிகவும் அழகானதொரு கதை. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅருமையான கதை...
ReplyDelete