கடந்தவாரம் பாரதியாரின் நினைவு இல்லம் சென்றிருந்தோம்.அங்கு தாங்கும் இடத்திலும் இளைஞர்கள் பெரும் உதவியாக இருந்தனர்.இரண்டு நாட்கள் அருகே இருக்கின்ற பாஞ்சாலங்குறிச்சி,கயத்தாறு, அத்துடன் குற்றாலக் குளியல் என்று சுற்றி பார்த்தோம்.எட்டயபுரத்தில் கவியரங்கம் பேச்சரங்கம் என்று நல்ல முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு ரயிலில் ஏறுவதற்கு காத்திருக்கும் பொது என் பிராயா ணப்பையை ஒரு இளைஞர் சுமந்து வந்து என் இருக்கையில் வைத்துச் சென்றார்.அதேபோல் இறங்கும் இடம் மாம்பலம் வந்தவுடன் முன்பின் தெரியாத ஒருவர் வந்து பையைத் தூக்கிக்கொண்டு வந்து நான் கீழே இறங்க உதவிசெய்தார்.
இறங்கும்போது தூறல் போட்டுக் கொண்டிருந்தது. என்னுடன் இறங்கிய ஒரு தம்பதிகளில் அந்த இளைஞன் என் சுமையையும் தான் எடுத்துக் கொண்டு வந்ததுமல்லாமல் நான் நனையாமல் எனக்கு குடைபிடித்தான்.பதிவரை வந்தவன் நான் வரவழைத்திருந்த டாக்சி திரிவர் அடையாளம் கேட்டுக் கொண்டு அருகே வந்து என் பையை வாங்கி கொண்டு படியேறினார்.என்னை மெதுவாக வரும்படி கூறிவிட்டு சூட்கேஸை காரில் வைத்துவிட்டு டிக்கியிலிருந்து குடையை எடுத்துக் கொண்டு வந்து நான் நனையாமல் கார்வரை அழைத்துச் சென்று உள்ளே அமரவைத்தான். அப்புறம்தான் மெதுவாக எப்படிப் போகவேண்டும் அம்மா என்று கேட்டான் அந்த டாக்சி டிரைவர்.
அன்று எனக்கு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும் கருணைமனமும் கடமை உணர்வும் இருப்பவர்களாகத் தோன்றினார்கள்.இதேபோல் எல்லாஇடங்களிலும் எல்லாரிடமும் எல்லா இளைஞர்களும் இருக்கவேண்டும் இறைவா என வேண்டிக் கொண்டே வீட்டில் வந்து இறங்கினேன்.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.
நல்ல அனுபவம்.... நல்ல மனிதர்கள் எங்கும் இருந்தால் நல்லது.
ReplyDeleteநடக்கட்டும் அம்மா...
ReplyDeleteஉங்களின் நல்ல குணத்திற்கும், நல்ல மனத்திற்கும், நீங்கள் எங்கு சென்றாலும் இதுபோல யாராவது வந்து நிச்சயமாக உதவி செய்வார்கள்.
ReplyDeleteஇதனைத் தங்கள் மூலம் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
வணக்கம் அம்மா. நலமா? நல்லவர்கள் கண்களில் படுவதெல்லாம் நல்லதாகவே படுவது பற்றி ஒரு (மகாபாரதம் தழுவிய) கதை நினைவுக்கு வருகிறது. மென்மையான எழுத்து தங்களின் மனம் போலவே...
ReplyDelete