Sunday, May 27, 2012

edhilum gavanam thevai.

எதிலும் கவனம் தேவை .
  சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகள் எழுதியிருந்த கடிதத்திலிருந்து முக்கியமாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
சென்னையிலிருந்து புறப்பட்ட நான் இரண்டு குழந்தைகளுடன் நியூயார்க் நகரை வந்து அடைந்தேன்.விமானம் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது.விமான நிலையத்திற்கு என் கணவர் தன் நண்பருடன் வந்திருந்தார்.எங்கள் பெட்டிகளை  தன் நண்பரின் உதவியுடன் எடுத்துக் கொண்டு வ்ந்தார். நாங்கள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே கார் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.என் கணவரின் கையில் அவரது சிறிய ஆபீஸ் சூட்கேஸ் இருந்தது.அதில்தான் அவர் தனது விசா பாஸ்போர்ட் பெர்மிட் முதலியவற்றை வைத்திருந்தார். 
எங்கள் பெட்டிகளை காரின் பின்பக்கம் வைப்பதற்காக கதவைத் திறந்தவர் தன் கையிலுள்ள சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு என் பெட்டியைத் தூக்கினார்.அப்போது பார்த்துக் கொண்டே இருந்தானோ என்னவோ ஒரு கருப்பு அமெரிக்கத் திருடன் அந்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.உடனிருந்த நண்பர் அதைக் கவனித்துவிட்டார்.ஏய்,திருடன், திருடன்.... என்று கத்திக் கொண்டே அவன் பின்னே வேகமாக ஓடினார்.சற்றுத் தொலைவு ஓடியதும் தன்னைப் பின்தொடர்வது போலிஸ் என நினைத்தானோ என்னவோ தூக்கிவந்த பெட்டியை எறிந்துவிட்டு ஓடிவிட்டான்.அதைப் பொறுக்கிக் கொண்டு வந்த நண்பர் மூச்சு வாங்க வந்து நின்றார்.என் கணவர் அந்த நண்பரிடம் நன்றி கூறியதுடன் என் எதிர்காலமே காப்பாற்றப் பட்டது.இந்தப் பெட்டியில்தான் என் அத்தனை முக்கிய காகிதங்களும் உள்ளன.இவை இல்லையென்றால் நான் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன்.என்றார்.அத்துடன் அந்த நண்பர் நல்ல வேளையப்பா இன்று நான் நீலக்கலர் ஷர்ட் போட்டுவந்தேன். அதனால் திருடன் என்னை போலீஸ் என நினைத்து பெட்டியைக் கீழே போட்டுவிட்டான் போலும் என்றார். ஒருவேளை அவன் என்னை சுட்டிருந்தால் ...நினைக்கவே பயமாக இருக்கிறது என்றபோது நாங்கள் நடந்த நிகழ்ச்சியை நல்லபடியாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினோம்.இனி எந்தப் பொருளையும் கவனமாகக் கையாள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம்.
இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் உண்மையிலேயே நானும் கடவுளுக்கு நானும் நன்றி செலுத்தினேன்.இதைப் படிப்பவர்களும் கையிலிருக்கும் பொருளை கீழே வைக்கும் போது கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.














ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. உண்மைதான்.வேறு எந்த இடத்தைவிட நியூயார்க்கில் பெட்டியைத் தொலைத்தவர்கள் எங்கள் வீட்டிலேயே இருவர் இருக்கிறார்கள்.
    அந்தப் பரிதாபத்தைச் சொல்லி முடியாது. கல்யாணத்துக்காக எடுத்துச் சென்ற திருமாங்கல்யம் முதல் கொண்டு எங்கள் உறவினர் ஒரு சின்னப் பெட்டியில் வைத்திருந்ததை,ஏதோ கேள்வி கேட்டு ஒருவன் எடுத்துச் சென்றுவிட்டான். வீல்சேரிலிருந்து எழுந்திருக்க முடியாதவர் அதை இன்னும் மறக்கவில்லை.

    ReplyDelete