Friday, October 20, 2017

Fwd: தகப்பன்சாமி


---------- Forwarded message ----------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: 2017-10-17 12:41 GMT+05:30
Subject: தகப்பன்சாமி
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>ஒருமுறை நாங்கள் ரயிலில் மதுரை அருகே உள்ள எங்கள் கிராமத்திற்குச்  சென்று கொண்டிருந்தோம்.வழக்கம்போல ரயிலில் கூட்டமாகத்தான் இருந்தது.எங்கள் எதிரே ஒரு சிறுவன் வயது ஆறு இருக்கும் தன பெற்றோருடன் அமர்ந்திருந்தான்.அப்போது தரையில் இருக்கும் குப்பையைப் பெருக்கியவாரே ஒரு சிறுவன் வந்தான் ஒவ்வொருவரிடமும் கைநீட்டினான். அந்த சிறுவனின் தந்தையிடம் கை  நீட்டிய போது இல்லையென்று கையை விரித்தார்.
அவனும் நகர்ந்து விட்டான்.

அப்போது ஒரு பலூன் விற்பவர் நிறைய பலூன்களை கையில் வைத்தபடி சிறு குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வெகுநேரம் நின்று வியாபாரம் செய்தார்.எங்களிடமும் வந்து நின்று கொண்டார். வெகுநேரம் சும்மாயிருந்த பையன் "அப்பா, பலூன்" என்று கேட்க ஆரம்பித்தான்.அவன் தந்தையும்"தெரியுமே, இன்னும் கேட்கலையேன்னு நெனச்சேன்.''என்றபடி பையைத் துழாவி ஒருரூபாய் நாணயத்தை எடுத்து பையன் கையில் கொடுத்தார்.வியாபாரி சந்தோஷமாக ஒரு பலூனை எடுத்து ஊதத் தொடங்கினார்.பையன் அவரைத் தள்ளிக் கொண்டு ஓடி  பெருக்கிக் கொண்டு செல்லும் பையனிடம் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்துப் புன்னகைத்து  விட்டு மீண்டும் வந்து தன்னிடத்தில் உட்கார்ந்தான்.
அப்போதுதான் நான் அந்தஏழைச் சிறுவனைப் பார்த்தேன். இரண்டு கால்களும் சூம்பி இருந்தன.அவனுக்கு கொடுக்கவேண்டியது அவசியம் என்று ஆறுவயது சிறுவனுக்குத் தெரிந்திருக்கிறது. 
அவன் தந்தை தன மகனின் செயலை ஆதரிப்பதுபோல அவனைத் தடவிக் கொடுத்தார்.
இதைப் பார்த்த  எனக்கு இருபது  ஆண்டுகளுக்கு முன் என் மகள் சிறிய பெண்ணாக  அநேகமாக இதே ஆறு வயதுதான் இருக்கும் .பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.அப்போது ஏதோ ஓர் இடத்தில் பேருந்து நின்றுகொண்டிருந்தது.
திடீரென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மகள் அழ ஆரம்பித்தாள்.ஏனம்மா அழுகிறாய் என்று பலமுறை கேட்டபிறகு அழுகையை நிறுத்தியவள்  "வெளியே ஒரு அண்ணா என்கிட்டே காசு கேட்டுச்சு என்கிட்டேதான் காசே இல்லையே என்ன சேய்வேன் ?"என்றவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள் நாங்கள் சிரித்தபடி அந்தப் பையனை அழைத்து என் மகள் கையில் காசை க் கொடுக்கச் சொன்னோம் பெற்றுக் கொண்ட சிறுவனின் புன்னகையைப் பார்த்து என் மகளும் சிரித்தாள்.ஏழையின் சிரிப்பில் இறைவனையேஅன்று   நாங்கள் பார்த்தோம் .
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com --
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, June 27, 2017

 
                                         
-----எதிர்பாரா மருந்து.;   ஒருநாள்   எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு
அப்பாடா என்று தலையை தலையணையில்  வைத்தேன்.திடீரென்று  என் மகன்   வீர் வீரென்று அழ ஆரம்பித்தான்.பதறிய  அவனைத் தூக்கி சமாதானம் செயது பால்  கொடுத்தேன் ஆனால் பாலைத் துப்பிவிட்டு அழ ஆரம்பித்தான்.
தோளில்  போட்டுத் தட்டியும் வேடிக்கை காட்டியும் பயனில்லை.வீட்டில் அனைவரும் எழுந்துவிட்டனர்.இரவு பன்னிரெண்டைத் தாண்டி விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர் வீட்டுக்கு ஓடினோம். அவரும் குழந்தையைப் பார்த்துவிட்டு உடலில் எந்த குறையும் தெரியவில்லை.பால் கொடுத்துத் தூங்க வையுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
மணி ஒன்றைத் தாண்டிவிட்டது.அக்கம்பக்கம் அனைவரும் எழுந்து ஆளாளுக்கு ஆலோசனை சொல்லத தொடங்கினர்.எனக்கு அழுகையே வந்து விட்டது.என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.குழந்தையின் உடல் வேர்த்து நனைந்து விட்டது.என்னால் நிற்க முடியாமல் உடல் தளர்ந்து விட்டேன்  அப்படியே உட்கார்ந்து குழந்தையை மடியில் கிடத்தினேன் குப்புறப் படுக்க வைத்துத் தட்டினேன்.அப்போது என் மாமியார் அருகே வந்து குழந்தையின் பின் புறத்தைத் தட்டிக் கொடுத்தார்.என்ன மாயமோ குழந்தையின் அழுகை சற்றுக் குறையவே மாமியார் குழந்தையின் அடிமுதுகில் விளக்கு வைத்துப் பார்த்தார் ஏதோ பூச்சிக் கடி பொரிப்பொரியாய்த் தென்பட்டது.
என் மாமியார் உடனே ஒரு வெள்ளைப் பூண்டை எடுத்து கையால் நசுக்கி பூச்சிக்கடித்த இடத்தில் தேய்த்து விட்டார்.அடுத்த நிமிஷமே குழந்தை அயர்ந்து தூங்க ஆரம்பித்தான்.அப்போதுதான் இரவு படுக்கப் போகுமுன் என் மாமியார் அடுத்தநாள் சமையலுக்காக பூண்டு உரித்த கையைத் தான் குழந்தையின் பின்புறத்தில்  தடவிக் கொடுத்திருக்கிறார்.அந்த மருந்து பட்டு அரிப்பு குறைந்திருக்கிறது.
எப்படியோ இரண்டுமணிக்கேனும் தூங்க முடிந்ததே என்று நானும் படுக்கையில் சாய்ந்தேன்.

Friday, March 17, 2017

மொட்டைத் தலையும் முழங்காலும்

                  இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் காது வலியில் துடித்துக் கொண்டிருந்தேன்.அடிக்கடி காது மடலில் வலி வந்து ஒரு நாள் முழுதும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தேன். சைனஸ் என்று மூன்று மாதம் வைத்தியம், அதன் பின் இஎன்டி இடம் வைத்தியம், அதன் பின் ஸ்கின் 
டாக்டரைப் பார்க்கச் சொன்னதால் அவரிடமும் வைத்தியம் பார்த்தும் வலி வந்துகொண்டுதான் இருந்தது.வேறு ஒரு இஎன்டி டாக்டர் ஸ்கேன் செய்யச் சொன்னார். அதிலும் எந்தக் குறையும் தெரியவில்லை.எனக்கு மட்டும் என் உள்ளுணர்வு ஏதோ பெரிய பாதிப்பு என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
உறவினர் எல்லாம் இது நரம்பு சம்பந்தமானது. என்றதால் நரம்பு டாக்டரையும் பார்த்து வைத்தியம் செய்தும் பலனில்லை. 
      
                 இனி இறைவனே கதி என்று கோவில்களுக்குச் சென்று முறையிடத் தொடங்கினேன்.எங்களின்  பஜனை கோஷ்டியுடன் கரூர் தான்தோன்றிமலை கிரிவலம் செய்து ஊர் திரும்பினேன் மாம்பலம் ரயிலடியில்  அதிகாலையில் வந்து இறங்கிய என்னால் நடக்கவோ மூச்சு விடவோ முடியவில்லை. இறைவா என்னை வீட்டில் சேர்த்துவிடு  அதுவரை காத்திரு என்று வேண்டிக் கொண்டபோது என் உடன் வந்த தோழி அவர்கள் காரில் என்னைக் கொண்டுபோய் வீட்டு வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றாள் 

               வீட்டுக்குள் நுழைந்த என்னைப்  பார்த்த என் மகள் திகைத்தாள். முகம் கால்கள் எல்லாம் வீங்கிப் போயிருந்தன.படுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டாள்  விடிந்ததும் மருத்துவமனை சென்றோம் அங்கும் பழையகுருடி கதவைத் திறடி கதைதான்.ஒருநாள் முழுவதும் ஜெனரல் டாக்டர் நரம்பு டாக்டர், இதயம் பார்க்கும் டொக்டர் எல்லா டெஸ்டும் பார்த்தபின் சிறுநீரக சம்பந்தமான டாக்டரைப் பார்க்கச் சொல்லவே சரி அவரையும் பார்த்துவிடுவோம் என்று அங்கும் சென்றோம்.

                  "உங்கள் கிட்னி பழுதடைந்துள்ளது.அதனால்தான் ரத்த அழுத்தம் இவ்வளவு அதிகமாக உள்ளது.உடம்பு வீக்கமும் அதனால்தான்." என்றவர் தொடர்ந்து உங்கள் கிட்னி  பழுதானதைத்தான்  கால்முகம் வீக்கம் காட்டிக் கொடுத்துள்ளது.உணவில் உப்பில்லாமல் பத்தியமாகச் சாப்பிடுங்கள் நீர் அரைலீட்டருக்குமேல் சாப்பிட வேண்டாம்.எல்லா காய்களையும் வேகவைத்து வடிகட்டி சாப்பிடுங்கள்.
கீரை தேங்காய் ,நெய்  எண்ணையில் பொறி த்தது எல்லாம் விலக்கிவிடுங்கள்."என்று சொல்லக் சொல்ல என் மனம் என்ன பாடு பட்டது என்பதை சொல்ல முடியாது.

                     இன்ன உடம்பு என காட்டிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி டாக்டர் சொன்னபடியே பத்தியமாக இருந்து மருந்து சாப்பிட்டு ஒரே மாதத்தில் வீக்கம் குறைந்து ஓரளவு ரத்த அழுத்தமும் குறைந்தது.
இப்போது மூன்று மாதங்களாக காது வலியும் வருவதில்லை.என்னைப்  பார்க்க என் உறவினர் ஒருவர் வந்திருந்தார்.அவர் அக்குபஞ்சர் வைத்தியம் செய்து கொள்பவர்.அவரிடம் பேசியபோது அவருக்கு வைத்தியம் செய்பவர் காதுக்கும் கிட்னிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னாராம்.முன்னரே தெரிந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிட்னி பரிசோ தனை செய்துகொண்டிருப்பேன்.என்ன செய்வது இரண்டு ஆண்டுகள் வலயில் தவித்ததோடு என்னவென்றே தெரியாமல் தவித்த தவிப்புதான் அதிகம்.இனி யாருக்கேனும் காது மடலைச் சுற்றி நரம்பில் வலி ஏற்பட்டால் உடனே உங்கள் கிட்னி சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என் இந்த அனுபவம் மற்றவருக்கும் பயன்படட்டும் என்றே இதை எழுதியுள்ளேன்.

தற்போது பத்தியமாகசாப்பிட்டு குறைவாக நீர் அருந்தி ஓரளவு  நன்றாகவே இருக்கிறேன்.
வாயைக் கட்டினால்  நோயைக் கட்டலாம் என்பது இப்போது எனக்குப் பொருத்தமாக இருக்கிறது..


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Wednesday, February 15, 2017

அவசர காரியம் ஆகாது.


                      பெங்களூரிலிருக்கும்  என் மகன் சொந்த வீட்டுக்கு குடிபோகும்போது வீட்டுப் பொருட்களையெல்லாம் கட்டி வண்டியில் வைத்து அனுப்பிவிட்டுக் கடைசியில் கையில் கொண்டு போவதற்காக விலையுயர்ந்த வெள்ளிப் பொருட்களையெல்லாம் பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்தான்.
              பெங்களூரில் வீட்டைக் காலி செய்வதாயிருந்தால் வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்துக் கொடுத்துவிட்டுத்தான் காலி செய்யவேண்டும் என்பது  அங்கு எழுதப் படாத சட்டம்.
               என் மருமகளும் வீட்டிலிருக்கும் குப்பைகளையெல்லாம் ஒரு பையில் போட்டு அதன் பக்கத்திலேயே வைத்திருந்தாள்  கிட்டத்தட்ட நான்கைந்து பைகள் சேர்ந்து விடவே அத்தனையையும் 
கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு வந்து விட்டான் என் மகன்.
அவற்றோடு வெள்ளிப் பாத்திரங்கள் கிட்டத்தட்ட இரண்டு கிலோ பையோடு வாசலில் காத்துக் கிடந்தது குப்பையோடு குப்பையாய்.
                  காலை 9 மணிக்கு வைத்த குப்பையை எடுக்க தினமும் பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் வண்டியில் வீட்டு வாசலில் இருக்கும் குப்பையையெல்லாம் அள்ளிக் கொண்டு போவார்கள் நகர சுத்திகரிப்பாளர்கள்.அவர்கள்  வருமுன்பாகவே குப்பையைக் காலி செய்யவேண்டுமென்னும் அவசரத்தில் எல்லாக் குப்பைப் பைகளையும் வாசலில் வைத்தாயிற்று.
                    ஒரு  மணிக்குமேல் சுண்ணாம்படிப்பவருக்கு வீட்டு  சாவியைக் கொடுத்துவிட்டு புறப்படும்போதுதான் வெள்ளிப் பாத்திரங்கள் வைத்த பையை இருவரும் தேடினார்கள்.அவசரத்தில் எந்தப் பையில் வைத்தோம் என்பதே இருவருக்கும் மறந்து விட்டது.
                    
                               இரண்டுமணிநேரம்தேடியும்கடைக்கவில்லை.இருவருக்கும் அழாத குறைதான்.சரி வீட்டையே காலி செய்தபின் எங்கிருந்து கிடைக்கும் பலரும் வந்து  போன இடம்.யார்கையில் கிடைத்ததோ என்று சமாதானம் செய்து கொண்டு ஒருவழியாக ஐந்து மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டனர்.

                       வெளியே வந்து வண்டியை இயக்கும்போதுதான் 
குப்பைப் பைகள் அங்கேயே யிருப்பதை மருமகள் பார்த்தாள் 
என்ன இன்றைக்கு என்று குப்பை வண்டி வரவில்லையே.வீட்டு வாசலில் இத்தனை குப்பை கிடக்கிறது. வீட்டுக் கார அம்மாள் பார்த்தால் கத்துவாள். சீக்கிரம் புறப்பட்டுப் போய்விடலாம் என்றபடியே அமர்ந்தாள்.ஆனால் என்ன தோன்றியதோ உடனே இருங்கள் என்று சொன்னபடியே வண்டியிலிருந்து குதித்து அந்தக் குப்பைப் பைகளைத் திறந்து திறந்து பார்த்தவள் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள்.                     

                        மகிழ்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. பெருமூச்சு வாங்க இதோ நம்ம பொருள் பத்திரமா இருக்குங்க என்றபடியே பையைக் காட்டினாள்.உள்ளே வெள்ளிப் பாத்திரங்கள் அவர்களைப்  பார்த்துச் சிரித்தபடி ஜம்மென்று பைக்குள் அமர்ந்திருந்தன.என்மகனும் பாடுபட்ட பொருள் நம்மை விட்டுப் போக பகவான் விட்டுவிடுவாரா.நாலைந்து மணி நேரம் நாம் கஷ்டப் படணும்னு விதி இருக்கு.இனிமேலாவது அவசரமும் அலட்சியமும் இல்லாமே ஒரு காரியம் செய்யணும்னு தெரிஞ்சுப்போம்.என்றபடியே வீட்டுக்குப் புறப்பட்டனர்.
                எந்தக் காரியத்திலும் அவசரம் அலட்சியம் கூடாது என்பது ஒரு பெரிய படிப்பினைதானே எல்லாருக்கும்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, February 3, 2017

இப்படியும் ஒரு தொழில்.

ஒரு கல்யாணத்திற்காக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லவேண்டி வந்தது.
 டபுள் டக்கர் வண்டியில் டிக்கட்டைப் பதிவு செய்திருந்தோம்அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். வெளியிலிருந்து
2ஏ பிளாட்பாரத்திற்கு வெகு தொலைவு நடக்க வேண்டியிருந்தது நானும் என் மகளும் வேகமாக நடந்து வந்தோம். உள்ளே நுழையும் போதே வழியில் புத்தகங்கள் வார மாதப் பத்திரிகை விற்பவர் கண்ணில் படவே அவரிடம் கல்கியும் குமுதமும் அவசரமாக வாங்கி கொண்டோம்.முப்பத்தைந்து ரூபாய் வாங்கி கொண்டவர் நூறு ரூபாய்க்கு முதலில் சில்லறை இல்லை என்று சொன்னவர் சற்று நேரத்தில் இருக்கிறது எனக் கூறி மீதியையும் கொடுத்தார்.நாங்கள் எங்கள் வண்டி பிளாட்பாரத்தில் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக ஏறி எங்கள்  இருக்கையில் அமர்ந்தோம்.  சற்று நேரத்தில் வண்டியும் புறப்பட்டது நாங்களும் இருக்கையினுள் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு புத்தகத்தைப் பிடித்துப் பிரித்தோம். குமுதத்தின் அட்டையில் இலவச புத்தகத்தைக் கேட்டு வாங்குங்கள் என்று இருநதது . அதைப் பார்த்தாய் அந்தக் கடைக்காரன் இலவச  ஏமாற்றிவிட்டான் பார்.  என்றேன்.நாமதானம்மா பார்த்துக் கேட்டிருக்கவேண்டும்.என்றாள்

-                         நானும் அமைதியாக புத்தகத்தைப் பிரித்தேன்.உள்ளே...!
.அடாடா...மூன்று வாரங்களுக்கு முன் நடந்த செய்திகளும் படங்களும் அத்துடன் வரவிருக்கும் பொங்கலை வரவேற்கும் செய்திகளும் என்னைத் தூக்கிவாரிப் போட வைத்தது. உடனே அட்டையைப் பார்த்தேன் ஜனவரி 11ந்தேதி என்று போட்டிருந்தது.என் மகளுக்கும் அதே அதிர்ச்சி போலும் அவளது கல்கி புத்தகத்தில் 5-1-2017 என்று  இருந்தது.இருவரும் நன்கு ஏமாந்து விட்டோம். எங்கள் அவசரத்திற்கு நாங்கள் கொடுத்த விலை. இனி எந்தசந்தர்ப்பத்திலும் புத்தகம் வாங்கும் போது தேதி பார்க்காமல்  வாங்கக் கூடாது.என்ற படிப்பினையை நாங்கள் பெற்றோம். யாருக்கும் இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு.


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com