Friday, October 20, 2017

Fwd: தகப்பன்சாமி


---------- Forwarded message ----------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: 2017-10-17 12:41 GMT+05:30
Subject: தகப்பன்சாமி
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>



ஒருமுறை நாங்கள் ரயிலில் மதுரை அருகே உள்ள எங்கள் கிராமத்திற்குச்  சென்று கொண்டிருந்தோம்.வழக்கம்போல ரயிலில் கூட்டமாகத்தான் இருந்தது.எங்கள் எதிரே ஒரு சிறுவன் வயது ஆறு இருக்கும் தன பெற்றோருடன் அமர்ந்திருந்தான்.அப்போது தரையில் இருக்கும் குப்பையைப் பெருக்கியவாரே ஒரு சிறுவன் வந்தான் ஒவ்வொருவரிடமும் கைநீட்டினான். அந்த சிறுவனின் தந்தையிடம் கை  நீட்டிய போது இல்லையென்று கையை விரித்தார்.
அவனும் நகர்ந்து விட்டான்.

அப்போது ஒரு பலூன் விற்பவர் நிறைய பலூன்களை கையில் வைத்தபடி சிறு குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வெகுநேரம் நின்று வியாபாரம் செய்தார்.எங்களிடமும் வந்து நின்று கொண்டார். வெகுநேரம் சும்மாயிருந்த பையன் "அப்பா, பலூன்" என்று கேட்க ஆரம்பித்தான்.அவன் தந்தையும்"தெரியுமே, இன்னும் கேட்கலையேன்னு நெனச்சேன்.''என்றபடி பையைத் துழாவி ஒருரூபாய் நாணயத்தை எடுத்து பையன் கையில் கொடுத்தார்.வியாபாரி சந்தோஷமாக ஒரு பலூனை எடுத்து ஊதத் தொடங்கினார்.பையன் அவரைத் தள்ளிக் கொண்டு ஓடி  பெருக்கிக் கொண்டு செல்லும் பையனிடம் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்துப் புன்னகைத்து  விட்டு மீண்டும் வந்து தன்னிடத்தில் உட்கார்ந்தான்.
அப்போதுதான் நான் அந்தஏழைச் சிறுவனைப் பார்த்தேன். இரண்டு கால்களும் சூம்பி இருந்தன.அவனுக்கு கொடுக்கவேண்டியது அவசியம் என்று ஆறுவயது சிறுவனுக்குத் தெரிந்திருக்கிறது. 
அவன் தந்தை தன மகனின் செயலை ஆதரிப்பதுபோல அவனைத் தடவிக் கொடுத்தார்.
இதைப் பார்த்த  எனக்கு இருபது  ஆண்டுகளுக்கு முன் என் மகள் சிறிய பெண்ணாக  அநேகமாக இதே ஆறு வயதுதான் இருக்கும் .பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம்.அப்போது ஏதோ ஓர் இடத்தில் பேருந்து நின்றுகொண்டிருந்தது.
திடீரென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மகள் அழ ஆரம்பித்தாள்.ஏனம்மா அழுகிறாய் என்று பலமுறை கேட்டபிறகு அழுகையை நிறுத்தியவள்  "வெளியே ஒரு அண்ணா என்கிட்டே காசு கேட்டுச்சு என்கிட்டேதான் காசே இல்லையே என்ன சேய்வேன் ?"என்றவள் மீண்டும் அழ ஆரம்பித்தாள் நாங்கள் சிரித்தபடி அந்தப் பையனை அழைத்து என் மகள் கையில் காசை க் கொடுக்கச் சொன்னோம் பெற்றுக் கொண்ட சிறுவனின் புன்னகையைப் பார்த்து என் மகளும் சிரித்தாள்.ஏழையின் சிரிப்பில் இறைவனையேஅன்று   நாங்கள் பார்த்தோம் .
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. குழந்தைகள் எப்போதுமே நியாயமான பார்வை கொண்டவர்கள்.

    ReplyDelete