Friday, February 3, 2017

இப்படியும் ஒரு தொழில்.

ஒரு கல்யாணத்திற்காக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லவேண்டி வந்தது.
 டபுள் டக்கர் வண்டியில் டிக்கட்டைப் பதிவு செய்திருந்தோம்அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். வெளியிலிருந்து
2ஏ பிளாட்பாரத்திற்கு வெகு தொலைவு நடக்க வேண்டியிருந்தது நானும் என் மகளும் வேகமாக நடந்து வந்தோம். உள்ளே நுழையும் போதே வழியில் புத்தகங்கள் வார மாதப் பத்திரிகை விற்பவர் கண்ணில் படவே அவரிடம் கல்கியும் குமுதமும் அவசரமாக வாங்கி கொண்டோம்.முப்பத்தைந்து ரூபாய் வாங்கி கொண்டவர் நூறு ரூபாய்க்கு முதலில் சில்லறை இல்லை என்று சொன்னவர் சற்று நேரத்தில் இருக்கிறது எனக் கூறி மீதியையும் கொடுத்தார்.நாங்கள் எங்கள் வண்டி பிளாட்பாரத்தில் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக ஏறி எங்கள்  இருக்கையில் அமர்ந்தோம்.  சற்று நேரத்தில் வண்டியும் புறப்பட்டது நாங்களும் இருக்கையினுள் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு புத்தகத்தைப் பிடித்துப் பிரித்தோம். குமுதத்தின் அட்டையில் இலவச புத்தகத்தைக் கேட்டு வாங்குங்கள் என்று இருநதது . அதைப் பார்த்தாய் அந்தக் கடைக்காரன் இலவச  ஏமாற்றிவிட்டான் பார்.  என்றேன்.நாமதானம்மா பார்த்துக் கேட்டிருக்கவேண்டும்.என்றாள்

-                         நானும் அமைதியாக புத்தகத்தைப் பிரித்தேன்.உள்ளே...!
.அடாடா...மூன்று வாரங்களுக்கு முன் நடந்த செய்திகளும் படங்களும் அத்துடன் வரவிருக்கும் பொங்கலை வரவேற்கும் செய்திகளும் என்னைத் தூக்கிவாரிப் போட வைத்தது. உடனே அட்டையைப் பார்த்தேன் ஜனவரி 11ந்தேதி என்று போட்டிருந்தது.என் மகளுக்கும் அதே அதிர்ச்சி போலும் அவளது கல்கி புத்தகத்தில் 5-1-2017 என்று  இருந்தது.இருவரும் நன்கு ஏமாந்து விட்டோம். எங்கள் அவசரத்திற்கு நாங்கள் கொடுத்த விலை. இனி எந்தசந்தர்ப்பத்திலும் புத்தகம் வாங்கும் போது தேதி பார்க்காமல்  வாங்கக் கூடாது.என்ற படிப்பினையை நாங்கள் பெற்றோம். யாருக்கும் இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு.


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 comments:

  1. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு அம்மா.... நன்றி....

    ReplyDelete
  2. தங்களின் இந்த கசப்பான அனுபவங்களை கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.

    ஏமாற்றும் மனம் கொண்ட மானம் கெட்ட வியாபாரிகளுக்கு இதுவும் ..... இப்படியும் ஒரு பிழைப்பா?

    இனி அவர்களாகவே திருந்த வேண்டும் அல்லது யாராவது அவர்களை நன்கு உதைத்துத் திருத்த வேண்டும்.

    இதைப்படிப்போருக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும் இந்தத் தங்களின் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ’இப்படியும் ஒரு தொழில்’ - எனும் போதே உங்கள் அறச்சீற்றம் புரிந்து கொண்டேன். மனசாட்சி இல்லாத மனிதர்கள். தெரிந்தே ஏமாற்றுகிறார்கள்.

    ReplyDelete