Friday, May 10, 2013

சிறு துரும்பு.



--
இளம் வயதிலேயே கதை எழுதி அதை என் அப்பா அம்மாவிடம் படித்துக் காட்டுவேன் .. அதன் பின்தான் பத்திரிகைக்கோ வானொலிக்கோ  அனுப்புவது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு  சிறுகதை எழுதி அதை படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன்.
கதையின் நடுவே ஒரு வரி வந்தது."அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் டக் டக்கென நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தார்." இந்த வரிகளை நான் படிக்கும்போது உண்மையாகவே போலீஸ்காரர் உள்ளே வந்தார்.
என் தந்தையார் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க, இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"உங்கள் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன் ஏதேனும் பொருள் திருட்டுப் போனதா?" என்று.
நானும் என் தாயாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.எங்கள் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியை நாங்கள் தந்தையாரிடம் சொல்லவில்லை.அதனால் அவர் "எங்கள் வீட்டில் திருடு ஒன்றும் நடக்கவில்லை."என்று சொன்னபோது நான் குறுக்கிட்டு "இல்லை சார், இரண்டு புதுப் புடவைகள் திருட்டுப்போய் விட்டன."என்றேன்.
"அதானே பார்த்தேன் திருடியவனே உங்கள் வீட்டில் திருடியதாகச் சொன்னானே "
"ஆமாம் ஐயா, ஏதோ ஏழை.அவன் பெண்டாட்டி கட்டிக்கொள்ளட்டும்னுதான் நாங்களும் சும்மா இருந்துட்டோம் "
"அப்படியெல்லாம் திருட இடம் கொடுக்கக் கூடாது.நாளைக்கு ஆதாரத்தோட ஸ்டேஷனுக்கு வந்து புடவையை வாங்கிக் கொள்ளுங்க." என்றார்.
நாங்களும் சரியெனத் தலையை ஆட்ட அவரும் சென்றுவிட்டார்.
என் தந்தையார், "என்ன ஆதாரம் இருக்கிறது?புடவை வாங்கிய ரசீது  இன்னுமா இருக்கும்?
என்ன தலைவலி இது. புடவையை வாங்காவிட்டாலும் தவறாச்சே இப்போ ஆதாரத்துக்கு எங்கே போவது?"என்று சிந்தனை வயப்பட்டார்.
அப்போதுதான் நான் எழுதியிருக்கும் தினசரிக் குறிப்பு நினைவுக்கு வநதது.சிறிய பழைய நோட்டுப் புத்தகத்தில் ஒவ்வொருநாளும் தேதி போட்டு நிகழ்வுகளை எழுதியிருந்தேன்.இரண்டு மாதங்களுக்குமுன் தேதியைப் புரட்டிப் பார்த்தபோதுதான் அந்தப் புடவை வெளியில் காயப் போட்டிருந்தது காணாமல் போனதை எழுதியிருந்தேன்.மறுநாள் என் தந்தையார் அந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு  சென்று புடவைகளை வாங்கிவந்தார். அத்துடன் இன்ஸ்பெக்டர் டயரி எழுதிய என்னைப் பாராட்டியதாகவும் சொன்னார்.
சாதாரண டைரிக்குறிப்பு ஒற்று சாட்சியாக நின்ற வேடிக்கையை எண்ணிச் சிரித்தேன் நான். என் அம்மாவோ இதுதான் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது.என்றார். 
உண்மைதானே!






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 comments:

  1. டைரிக்குறிப்புகளால் இரண்டு புடவைகள் கிடைத்து விட்டது...

    சிறு துரும்பும் பல்குத்த உதவும் - சரி தான் அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //அப்போதுதான் நான் எழுதியிருக்கும் தினசரிக் குறிப்பு நினைவுக்கு வநதது.சிறிய பழைய நோட்டுப் புத்தகத்தில் ஒவ்வொருநாளும் தேதி போட்டு நிகழ்வுகளை எழுதியிருந்தேன்.இரண்டு மாதங்களுக்குமுன் தேதியைப் புரட்டிப் பார்த்தபோதுதான் அந்தப் புடவை வெளியில் காயப் போட்டிருந்தது காணாமல் போனதை எழுதியிருந்தேன்.மறுநாள் என் தந்தையார் அந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு சென்று புடவைகளை வாங்கிவந்தார். அத்துடன் இன்ஸ்பெக்டர் டயரி எழுதிய என்னைப் பாராட்டியதாகவும் சொன்னார்.
    சாதாரண டைரிக்குறிப்பு ஒற்று சாட்சியாக நின்ற வேடிக்கையை எண்ணிச் சிரித்தேன் நான். //

    தினசரி டைரி எழுதுவதும் மிகவும் நல்ல பழக்கம். இதுபோல எதற்காவது நிச்சயமாக ஒருநாள் அது பயன்படக்கூடும். பாராட்டுகள். வாழ்த்துகள்>

    ReplyDelete
  3. ஒரு சிறு டைரிக் குறிப்பு சாட்சியாக அமைந்துவிட்டதே......

    ReplyDelete