Monday, April 13, 2015

பெயர் பிறந்த கதை

ஒரு மாலை நேரம். வீட்டிலிருக்கும் அனைவரும் நிலாவெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவரவர் வயதுக்கேற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று சின்னப் பெண் தன தாத்தாவிடம் கேட்டாள் ,"தாத்தா, இந்த பெங்களூருவுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தாத்தா?".தாத்தா புன்னகைத்ததைப் பார்த்ததும் நாங்களும் அவர் ஏதோ ஒரு கதை சொல்லப் போகிறார் என தெரிந்துகொண்டு அவரருகே சென்று அமர்ந்தோம்.

"நானே சொல்லணுமின்னு இருந்தேன்.பாப்பா கேட்டது நல்லதாப் போச்சு.கேளு.சுமாரா ஒரு அறுநூறு வருசத்துக்கு மின்னாலே இந்த எடமெல்லாம் காடாக கெடந்துச்சாம்.
அப்போல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்தான் இந்தப் பகுதியிலே இருந்துச்சாம். அப்படி இருந்த கொஞ்ச கிராமங்கள  கேம்பெகவுடான்ற ராசா ஆட்சி பண்ணாராம்.அவரு ஒரு நா சிப்பாய்ங்களோட காட்டுக்கு வேட்டைக்கு  வந்தாராம்.
ரொம்பநேரம் வேட்டையாடிட்டு களைச்சுப்போய் பார்த்தா கூட வந்த சிப்பாய்க யாரையும் காணோம்.ராசாவழிதவறி  காட்டுக்குள்ளார ரொம்ப தொலைவு வந்திட்டாரு. அவரூக்கொ நல்ல பசி ஏன்னா செய்யிறதுன்னே தெரியல.மெதுவா எதாச்சும் வழி தெரியிதான்னு பாத்துகிட்டே வரும்போது ஒரு சின்ன குடிசை தேம்புட்டுதாம். ராசாக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சாம். வெளியே நின்னாப்பல ஆறு வூட்டுக்குள்ள? அப்படின்னு கேட்டது உள்ளேருந்து வயசானஒரு  பாட்டிம்மா வந்தாங்க. அவங்ககிட்ட ராசா வழி தவறிடுச்சு. பசிக்கு ஏதானும் கொடுங்கன்னு கேட்டாராம்.அந்தப் பாட்டிம்மாவும் உள்ளே கூப்பிட்டு உக்காரவச்சு தன்கிட்டே இதுதான் இருக்குது. பசிக்கு சாப்புடுன்னு கொஞ்சம் வெந்த பயறுகுடுத்துச்சாம். அதைத் தின்னு தண்ணி குடிச்ச ராசாவுக்கு புது தெம்பு வந்துடிச்சாம் 
அந்தப் பாட்டிகிட்டே வழிகேட்டுக்கிட்டு தன்னோட ஊருக்கு வந்து சேர்ந்தாராம்.
மறுநாள் சிப்பாய்கள அனுப்பி அந்தக் கிழவியை தன்னோட ஊருக்கு வரவழைச்சார்.தன வீட்டுக்கு அவளை க்  கூட்டிவந்து அவள் இருந்த நிலப்பகுதியை அவளுக்கே கொடுத்து நிறையப் பொன்னும் கொடுத்ததோட வெந்த பயறு கொடுத்த காரணத்தாலே அந்தப் பகுதிக்கு பெந்த காளு  ஊரு அப்படின்னு பேர் வச்சான். அதுதான் பிற்பாடு பெங்களூருன்னு ஆயிடிச்சி.பெந்த அப்படீன்னா வெ ந்தன்னு அர்த்தம் கன்னட பாஷையில.காளுன்னா பயறு வெந்த பயறு தந்த ஊருன்னு பேர் வந்துச்சு. காலப்போக்கில அதுவே பெங்களூருன்னு ஆகிப்போச்சு. என்ன புருஞ்சுதா என்றதும் அனைவரும் நல்ல கதையோட புது விஷயமும் தெரிந்து கொண்டோம் தாத்தா.என்றபடியே அவரவர் படுக்கச் சென்றனர்.

















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 comments:

  1. குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான அழகான பெயர்க்காரணக் கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருமை அம்மா... அறிந்தேன்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வெந்த பயறு ஊர்..... நல்ல பெயர்க்காரணம்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மரியாதைக்குரிய அம்மா திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு வணக்கம்! அண்மையில் ஸ்ரீரங்கத்தில் தங்களது இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பினில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (26.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

    நினைவில் நிற்போர் - 26ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/26.html

    ReplyDelete