Friday, March 17, 2017

மொட்டைத் தலையும் முழங்காலும்

                  இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் காது வலியில் துடித்துக் கொண்டிருந்தேன்.அடிக்கடி காது மடலில் வலி வந்து ஒரு நாள் முழுதும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தேன். சைனஸ் என்று மூன்று மாதம் வைத்தியம், அதன் பின் இஎன்டி இடம் வைத்தியம், அதன் பின் ஸ்கின் 
டாக்டரைப் பார்க்கச் சொன்னதால் அவரிடமும் வைத்தியம் பார்த்தும் வலி வந்துகொண்டுதான் இருந்தது.வேறு ஒரு இஎன்டி டாக்டர் ஸ்கேன் செய்யச் சொன்னார். அதிலும் எந்தக் குறையும் தெரியவில்லை.எனக்கு மட்டும் என் உள்ளுணர்வு ஏதோ பெரிய பாதிப்பு என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
உறவினர் எல்லாம் இது நரம்பு சம்பந்தமானது. என்றதால் நரம்பு டாக்டரையும் பார்த்து வைத்தியம் செய்தும் பலனில்லை. 
      
                 இனி இறைவனே கதி என்று கோவில்களுக்குச் சென்று முறையிடத் தொடங்கினேன்.எங்களின்  பஜனை கோஷ்டியுடன் கரூர் தான்தோன்றிமலை கிரிவலம் செய்து ஊர் திரும்பினேன் மாம்பலம் ரயிலடியில்  அதிகாலையில் வந்து இறங்கிய என்னால் நடக்கவோ மூச்சு விடவோ முடியவில்லை. இறைவா என்னை வீட்டில் சேர்த்துவிடு  அதுவரை காத்திரு என்று வேண்டிக் கொண்டபோது என் உடன் வந்த தோழி அவர்கள் காரில் என்னைக் கொண்டுபோய் வீட்டு வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றாள் 

               வீட்டுக்குள் நுழைந்த என்னைப்  பார்த்த என் மகள் திகைத்தாள். முகம் கால்கள் எல்லாம் வீங்கிப் போயிருந்தன.படுத்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டாள்  விடிந்ததும் மருத்துவமனை சென்றோம் அங்கும் பழையகுருடி கதவைத் திறடி கதைதான்.ஒருநாள் முழுவதும் ஜெனரல் டாக்டர் நரம்பு டாக்டர், இதயம் பார்க்கும் டொக்டர் எல்லா டெஸ்டும் பார்த்தபின் சிறுநீரக சம்பந்தமான டாக்டரைப் பார்க்கச் சொல்லவே சரி அவரையும் பார்த்துவிடுவோம் என்று அங்கும் சென்றோம்.

                  "உங்கள் கிட்னி பழுதடைந்துள்ளது.அதனால்தான் ரத்த அழுத்தம் இவ்வளவு அதிகமாக உள்ளது.உடம்பு வீக்கமும் அதனால்தான்." என்றவர் தொடர்ந்து உங்கள் கிட்னி  பழுதானதைத்தான்  கால்முகம் வீக்கம் காட்டிக் கொடுத்துள்ளது.உணவில் உப்பில்லாமல் பத்தியமாகச் சாப்பிடுங்கள் நீர் அரைலீட்டருக்குமேல் சாப்பிட வேண்டாம்.எல்லா காய்களையும் வேகவைத்து வடிகட்டி சாப்பிடுங்கள்.
கீரை தேங்காய் ,நெய்  எண்ணையில் பொறி த்தது எல்லாம் விலக்கிவிடுங்கள்."என்று சொல்லக் சொல்ல என் மனம் என்ன பாடு பட்டது என்பதை சொல்ல முடியாது.

                     இன்ன உடம்பு என காட்டிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி டாக்டர் சொன்னபடியே பத்தியமாக இருந்து மருந்து சாப்பிட்டு ஒரே மாதத்தில் வீக்கம் குறைந்து ஓரளவு ரத்த அழுத்தமும் குறைந்தது.
இப்போது மூன்று மாதங்களாக காது வலியும் வருவதில்லை.என்னைப்  பார்க்க என் உறவினர் ஒருவர் வந்திருந்தார்.அவர் அக்குபஞ்சர் வைத்தியம் செய்து கொள்பவர்.அவரிடம் பேசியபோது அவருக்கு வைத்தியம் செய்பவர் காதுக்கும் கிட்னிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னாராம்.முன்னரே தெரிந்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிட்னி பரிசோ தனை செய்துகொண்டிருப்பேன்.என்ன செய்வது இரண்டு ஆண்டுகள் வலயில் தவித்ததோடு என்னவென்றே தெரியாமல் தவித்த தவிப்புதான் அதிகம்.இனி யாருக்கேனும் காது மடலைச் சுற்றி நரம்பில் வலி ஏற்பட்டால் உடனே உங்கள் கிட்னி சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
என் இந்த அனுபவம் மற்றவருக்கும் பயன்படட்டும் என்றே இதை எழுதியுள்ளேன்.

தற்போது பத்தியமாகசாப்பிட்டு குறைவாக நீர் அருந்தி ஓரளவு  நன்றாகவே இருக்கிறேன்.
வாயைக் கட்டினால்  நோயைக் கட்டலாம் என்பது இப்போது எனக்குப் பொருத்தமாக இருக்கிறது..






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. அம்மா... உடல்நலம் மிகவும் முக்கியம்... தொடர்ந்து கவனித்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. //இனி யாருக்கேனும் காது மடலைச் சுற்றி நரம்பில் வலி ஏற்பட்டால் உடனே உங்கள் கிட்னி சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.//

    உங்களின் இந்த அனுபவம் மற்றவருக்கும் பயன்படட்டும் என்றே இதை எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி, மேடம்.

    //வாயைக் கட்டினால் நோயைக் கட்டலாம்//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete