Tuesday, October 16, 2012

33 amma sonna kadhai.

                        அம்மா சொன்ன கதை.
 மாலை நேரம். அந்தக் காலத்தில் மின்விளக்கு கிடையாது. லேசாக இருட்டும்  நேரம். வாசலில் அமர்ந்திருந்த அம்மா சமயலறையில் இருந்த கைவிளக்கை ஏற்றிவிட்டு வரும்படி கூறினார்.எனக்கு அப்போது பனிரெண்டு வயது.இருட்டி உள்ளே போக எனக்குப் பயம் ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு மும்முரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அவர்கள் சொல்வது காதில் விழாதது போல் இருந்தேன்.ஆனால் அம்மாவோ விடுவதாக இல்லை.அதனால் பயமாக இருக்கும்மா என்று அழுவதுபோல் கூறினேன்.
அதற்கு அம்மா,"இதோபார்.அஞ்சுவதற்கு அஞ்சு.ஆனால் அச்சம் தவிரனு படிச்சது மறந்துபோச்சா?" என்றார் சற்றே கடுமையாக.அப்போதும் என் மனம் துணியவில்லை உள்ளே செல்ல.
உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.என்று ஆரம்பித்தார்."ஒரு முறை பாரதியார் சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.அப்போது அஷ்டலக்ஷ்மிகளும் அவர் முன் வந்து நின்றார்களாம்.அவர்கள் பாரதியாரிடம்,"பாரதி, நாங்கள் எட்டு பெரும் உன்னை விட்டு விலகப் போகிறோம் என்று சொன்னார்களாம்.நான் குறுக்கே கேட்டேன்."யாரம்மா அந்த எட்டுப்பேர்?"
அவர்கள்தான் செல்வம் தரும் தனலட்சுமி, குழந்தைப்பேறு தரும் சந்தானலட்சுமி, வெற்றியைத் தரும் விஜயலட்சுமி,தான்யலட்சுமி , வீரலட்சுமி, தைரியலட்சுமி ஆதிலட்சுமி,போன்ற எட்டுப்பேர்.உடனே இவர்கள் இப்படிச் சொன்னதும் பாரதி மறுப்புச் சொல்லலே. ஆனால் நீங்கள் போகும்போது ஒவ்வொருத்தரும் என்னிடம் சொல்லிட்டுத்தான் போகணும்னு சொன்னார்.அதனாலே மறுநாள் நாங்க இப்போ போகப்போறோம்னு சொன்னவுடனே பாரதி ஒரு கம்பிக் கையிலே எடுத்துக் கொண்டு வாசலிலே நின்னாராம்.ஒவ்வொருத்தரா வெளியே போகச் சொன்னாராம்.வெளியே போகும் ஒவ்வொருத்தரையும் உன் பேர் என்னனு கேட்டார்.நான் தன லக்ஷ்மின்னதும் போன்னு அனுப்பினார். நான் தான்யலக்ஷ்மின்னதும் போன்னார்  இப்படியே ஏழு பேர் போயாச்சு. கடைசியா வந்தவ தைரியலட்சுமி.அவள் நான் தைரியலக்ஷ்மின்னு சொன்னதும் பாரதி என்ன சொன்னார் தெரியுமா "
நான் ஆவலோடு "என்னம்மா சொன்னார்?"என்றேன்.
"நீ மட்டும் என்னை விட்டுப் போகக் கூடாது உன்னை நான் விடமாட்டேன்.எந்தக் கஷ்டம் நஷ்டம் போராட்டம்  துன்பம் எதுவந்தாலும் தாங்கற துக்கும் எதிர்த்து நிக்கறதுக்கும் மனசிலே தைரியம் வேணும் அதனாலே நீ உள்ளே போன்னு  அவளை மட்டும் நிறுத்திக் கொண்டாராம்.
இதிலேருந்து என்ன தெரியுது?மனுஷனாப் பிறந்தப்புறம் எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கணும் அதுக்கெல்லாம்தான் தைரியம் வேணும் நீ  இந்த மாலைவேளை இருட்டைப் பார்த்துப் பயப்படறே"
என்று அம்மா சொல்லி முடிக்கும் முன்னரே நான் உள்ளே போய் அந்த விளக்கை ஏற்றிவிட்டு வந்து விட்டேன்.என் அம்மாவும் மகிழ்ச்சியுடன்,"சமத்துக்குட்டி இப்படித்தான் எப்போதும் தைரியமாக இருக்கணும்"என்றார்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்தானே?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 comments:

  1. உண்மை தான் அம்மா...

    தைரியலஷ்மி (சக்தி) மட்டும் இருந்தால் போதும்... மற்றவர்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள்...

    ReplyDelete
  2. உண்மை....

    சிறப்பான கதையைத் தான் உங்க அம்மா சொல்லி இருக்காங்க...

    உங்கள் அம்மா சொன்னதை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றிம்மா.

    ReplyDelete
  3. பாரதியின் துணிச்சலும் தைரியமும் நேர்மையும் அனைவருக்கும் இப்போது தேவை. சரியான நேரத்தில் சரியான கதையைச் சொன்ன உங்க அம்மா நல்ல சிந்தனையாளர்.
    உங்களைச் சந்தித்த போதே இதை உணர்ந்தேன். மிகமிக நன்றிமா.

    ReplyDelete