Monday, November 5, 2012

34.கவனம் தேவை.

                கவனம் தேவை.
     
      வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்கிறோம்.அதிலும் நம்மைப் போன்ற மனிதர்களே நம்மை ஏமாற்றி ஏமாளியாக்கும் நிலை சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலை நேரம். ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்து "அம்மா, ஒரு மாதத்தில் உங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்கிறோம்.உங்கள் ரவிக்கை முதலியவற்றையும் குழந்தைகளுக்கான ஆடைகளையும் தைக்க கற்றுத் தருகிறோம். அத்துடன் சமையலில் புது மாதிரி உணவு வகைகளையும் கற்றுத் தருகிறோம். எங்கள் சங்கத்தில் இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆகிவிட்டால் வாரம் மூன்று வகுப்புகளுக்கு வரலாம்.என்று சொன்னபோது விடுமுறையை வீணாகக் கழிக்க வேண்டாமே தையல் கற்றுக் கொள்ளலாமே என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் நானும் ஆளுக்கு இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆனோம்.
      அவள் குறிப்பிட்டிருந்த நாளில் அவள் கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அங்கு எந்த கட்டடமும் இல்லை.அங்கு வந்த வேறு சில பெண்களும் இதே கதையைக் கூறியபோதுதான் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்பது புரிந்தது.
அந்தப் பெண்ணின் நடையும் உடையும் பேச்சும் நாங்கள்  எந்த சந்தேகமும் கொள்ளமுடியாதபடி இருந்தது. 
       ஒரு ஆரோக்யமான இளம்பெண் இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறாளே  என்று மனம் வருந்தியது. ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற அவமானமும் ஏற்படாமல் இல்லை. இனி இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. இதே வேலையாக இருக்கிறார்கள் சிலர். ஏமாற்றுவதில் பல புது யுத்திகளைக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்....

    ReplyDelete
  2. பல பேர் இது போல் உள்ளார்கள்... நாம் தான் விழிப்போடு இருக்க வேண்டும்...

    ReplyDelete