Wednesday, October 30, 2013

நீங்களே நீதிபதிகள்.



--


         ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் உள்ள தாயாரைத் தரிசித்து விட்டு கோதண்டராமரைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு முதிய பெண்மணி எண்பது வயதிருக்கும்  பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்.அவரைத் தாண்டி சென்ற பின் என்  பின்னால் பெரியதாகப் பேச்சுக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.ஆச்சரியப் பட்டுப் போனேன். அந்த பெண்மணி செல்போனைக் கையில் வைத்துப்  பேசிக் கொண்டிருந்தார்.
         அடுத்தநாள் காலையில் காவிரியாற்றில் குளிப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். வழியில் நெடுக இருந்த குடிசைவீடுகளில் இருந்து தொலைக் காட்சிகளின் ஒலி  கேட்டுக் கொண்டிருந்தது.ஒரு வீட்டின் வாயிலில் இருந்து இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
"இவ்வளவு தூரம் வரணுமா?ஒரு போன் அடிக்கலாமில்லே?"
"உன் நம்பர் தெரியல்லே.என் போன்ல வரிசையா இருவது நெம்பர் இருக்கு."
"எப்படி வந்தே? சைக்கில்லையா?"
"டூ வீலர்லதான்"
இந்த உரையாடலும் ஒரு குடிசை வீட்டின் முன்னாலிருந்துதான் வந்தது.
இந்த நாட்டை ஏழை நாடு என்றோ வளரும் நாடு என்றோ சொல்ல முடியுமா, என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
              மறுநாள் அதிகாலை துலா ஸ்நானம் செய்வதற்காக காவிரிக்குச் சென்றேன்.அங்கே ஒலிபெருக்கியில் "கம்பியைத் தாண்டிச் செல்லாதீர்கள்.
காவிரியில் புதைகுழிகள் உள்ளன.கம்பிக்கு உள்ளேயே குளியுங்கள்"என்று அறிவிப்புச் செய்து கொண்டிருந்தனர்.  உள்ளே கால் வைக்கவே கூசும் அளவுக்கு குப்பையும் துணிகளும் நிறைந்திருந்தது.ஒருபக்கம் துணி துவைப்பவர்கள் பல் துலக்குபவர்கள் என உள்ளூர் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.
                தைரியமாகக் கம்பியைத் தாண்டி நடுஆற்றில் சென்று பலரும் குளித்தனர். நாங்களும் அங்கே சென்று குளித்துக் கரையேறினோம். படித்துறையைத் தாண்டி வர இயலாதபடி சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டியது.பூலோக வைகுண்டம் என்று புகழப் படும் ஸ்ரீரங்கத்தின் புனிதத் தன்மை  இந்த நிலையால் பங்கப் பட்டிருப்பதை எண்ணி மனதுக்குள் புழுங்கினேன். ஆற்றின் கரையைச் சுத்தப் படுத்த அங்கங்கே ஆட்கள் இருந்து சுத்தம் செய்தால் ஆற்றின் பரிசுத்தமும் புண்ணிய க்ஷேத்திரத்தின் புனிதமும் காப்பாற்றப் படுமே என்று எண்ணினேன்.இப்போது இந்த நிலையைப் பார்த்தால் நம் நாடு முன்னேறியுள்ளது என்று சொல்லமுடியுமா?இரண்டு காட்சிகளையும் பார்த்து நாட்டின் நிலையைக் கூறுங்கள். நீங்களே நீதிபதிகள்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

3 comments:

  1. ஆங்காங்கே உள்ள நிலைமைகளை அழகாக உணர்ந்து சொல்லியுள்ளீர்கள்.

    ஒருபக்கம் நாகரீகம் + பொருளாதார முன்னேற்றம் + பணப்புழக்க அதிகரிப்பு தெரியத்தான் தெரிகிறது.

    மறுபுறம் சுத்தம் + சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலை தான் எங்கும் காணப்படுகிறது என்பதே உண்மை.

    சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது மா. துலாஸ்நானம் என்று நான் கனவு கண்டு கொன்ருந்தேன்.
    இப்படிக்கூட இருப்பார்களா.
    தொலைக்காட்சிதான் இலவசம் ஆச்சே. ஒருவேளை கைபேசியும் கொடுக்கிறார்களோ என்னவோ.

    ReplyDelete
  3. நம் நாடு முன்னேறியுள்ளது என்று சொல்ல முடியாது அம்மா... வருத்தப்பட வைக்கிறது...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete