Saturday, September 22, 2018

துணிவு வேண்டும்

             ஒருமுறை நாங்கள் குடும்பத்துடனும் உறவினர் சம்பந்தி குடும்பம் என பதினைந்து பேர் ஒரு தனி வண்டியில் திருச்சிக்குச் சென்றிருந்தோம் நாங்கள் திருமணம் முடிந்து ஊர் திரும்பும் போதே இரவு நேரமாகிவிட்டது. 
           நங்கள் திருச்சியை விட்டே வெளியேறவில்லை. ஆனால் 
அதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது.நான்கு தெருக்கள் சேரும் பகுதியில் ஒவ்வொரு வாகனமும் பீப் பீப் என கத்திக் கொண்டிருந்தனவே தவிர யாரும் யாருக்கும் வழி விடுவதாகத் தெரியவில்லை.
            எங்கள் வண்டியின் முன்பாகவும் பின்பாகவும் வாகனங்கள் 
வந்து நின்றன.வண்டிக்குள் இருந்த நாங்களோ  காதுகளைப்  பொத்திக் கொண்டோம்.நேரம் ஆகா ஆகா சத்தமும் வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போயிற்று.வழிகாட்டும் போலீசோ சட்டம் பாதுகாப்புக்கொடுக்கும் போலீசோ யாரையும் காணோம்.
             கிட்டாத தட்ட பத்து நிமிடங்களாகியிருக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு அவசர படுகிறார்கள் யாராவது சரியாக வழிவிட்டால் வண்டிகள் நகரும் என்று நாங்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் தம்பி சட்டென 
 வண்டியை வீட்டுக் கீழே இறங்கினார் அவருடன் எங்கள் மாப்பிள்ளையும் இறங்கினார் இருவருமே ஆறடி உயரம் கிருதா மீசை நல்ல சிவந்த நிறத்துடன் இருப்பார்கள் அன்று இருவருமே தூய வெண்மை நிறப்  பேண்டும் ஷர்ட்டும் அணிந்து கருப்பு பெல்ட் அணிந்திருந்தனர்.
ஒருவர் நடுப்பகுதியில் நிற்க மற்றவர் கை  அசைத்து வண்டி போகக் கட்டளையிட்டார் அவர் கைகாட்டிய  திசையில் முதல் வண்டி நகர்ந்தது.கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களில் அந்த இடமே காலியாகிவிட்டது. கடமையை முடித்து போக்குவரத்தைச் சரிசெய்தவர்கள் இருவரும் தங்கள் வண்டியில் அமர எங்கள் வண்டியும் புறப்பட்டது.நாங்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டோம்.
எங்கள் உடன் அமர்ந்திருந்த அவர்களின் தாயாரைப் பார்த்து நாங்கள் பெருமைப் பட்டோம்.எங்கள் மாப்பிள்ளையையும் அவர் தம்பியையும் வாய் நிறைய பாராட்டி சரியான நேரத்தில் துணிவைக் காட்டிய அவர்களின் சமயோசித புத்தியையும் பாராட்டி நன்றியும் சொன்னோம்.
நம் இளைஞர்கள் இதுபோல் இருந்தால் நம் பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

-------------------------------------------------------------------------------------------------------























ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. நல்ல விஷயம். பல இடங்களில் யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. களத்தில் இறங்கி வேலை செய்யவும் ஒருவரும் முன் வருவதில்லை..... அவர்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete